அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் விசேட அறிவிப்பு

அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் விசேட அறிவிப்பு

விசேட நிகழ்வுகளுக்காக ஜனாதிபதியின் புகைப்படங்கள் அல்லது செய்திகளை நினைவுச் சின்னங்களில் அல்லது நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் காட்சிப்படுத்துவதற்கு முன்னர் அனைத்து அரச நிறுவனங்களும் ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூலம் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

அரச நிதியைப் பெற்று மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது அரசாங்கத்தின் கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாகச் செயற்படுவது அவசியமானது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் அரச நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இந்த அறிவிப்பு அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், சட்டப்பூர்வ சபைத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply