முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உயிரிழப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உயிரிழப்பு

அனுராதபுரம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான டபிள்யூ.பி. ஏக்கநாயக்க தனது 76வது வயதில் காலமானார்.

அநுராதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று(10.10) தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டபிள்யூ.பி. ஏக்கநாயக்க நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரைப் பராமரித்து வந்த நபர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் சென்றிருந்ததாகவும், உயிரிழப்பு ஏற்படும் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் தனியாக இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

டபிள்யூ.பி. ஏக்கநாயக்கவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply