
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் புகைப்படங்கள்/செய்திகளை நிகழ்வுகளில் காட்சிப்படுத்துவதற்கு முன் அனுமதி பெறுமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பிரதமரின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அனைத்து இலங்கை அரச நிறுவனங்களும் பிரதமரின் புகைப்படங்கள் அல்லது செய்திகளை நினைவுச் சின்னங்களில் அல்லது நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் காட்சிப்படுத்துவதற்கு முன்னர், பிரதமரின் செயலகம் அல்லது உரிய அமைச்சரின் செயலாளரிடம் எழுத்து மூல அனுமதியைப் பெற வேண்டும் எனப் பிரதமரின் செயலாளர் அறிவித்துள்ளார்.