செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள்: தமிழ் பொது வேட்பாளரும் பட்டியலில்

செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள்: தமிழ் பொது வேட்பாளரும் பட்டியலில்

கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளர் உள்ளிட்ட மூன்று வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கையை உரியக் காலத்திற்குள் தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 28 வேட்பாளர்களும், அவர்களது நியமனக் கட்சிகளும் மாத்திரமே முழுமையான தேர்தல் செலவு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் செலவு அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நேற்று(13.10) நிறைவடைந்த நிலையில், 35 வேட்பாளர்கள் தங்கள் செலவு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.  

7 வேட்பாளர்கள் தனிப்பட்ட செலவு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ள போதும், குறித்த வேட்பாளர்களின் நியமனக் கட்சிகள் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறியுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர்களான, தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன், பத்தரமுல்லே சீலரத்ன தேரர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் சரத் கீர்த்திரத்ன ஆகியோர் தமது செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply