மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையிலான ரயில் பாதையில் ரயில் தடம் புரள்வால் மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மலையக ரயில் சேவைகள் தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த மீனகயா ரயில் இன்று காலை கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில் தடம் புரண்டது.

இந்நிலையில் கோட்டையிலிருந்து செல்லும் ரயில்கள் மருதானையிலிருந்து செல்லும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply