தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால்
கப்பலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.