காசா எல்லையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது, போர் நிறைவுக்கான ஆரம்பப் புள்ளியென இஸ்ரேல்
பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
நீண்ட கால தேடலுக்குப் பின்னர் தெற்கு காசா எல்லையில் ஹமாஸ் தலைவர் யாஹ்ஸா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
யாஹ்யா சின்வார் கொல்லப்படும் முன் எடுக்கப்பட்ட அவரின் இறுதி நொடிகள் குறித்த காணொளியை இஸ்ரேல் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
தற்போது கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கடந்த வருடம் ஒக்டோபர் 07 ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய மிகக் கொடூர தாக்குதலுக்கு முக்கியப் புள்ளியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் ஹமாஸ் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே உயிரிழந்ததன் பின்னர், யாஹ்யா சின்வார் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.