பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது,
தேர்தல் சட்ட விதிகளை மீறியமைமை குறித்தே சகல முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த முறைப்பாடுகளில் 211 முறைப்பாடுகளுக்குத் தீர்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் 79 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.