முல்லை கடலில் மூழ்கிய மூவர்

முல்லைத்தீவு கடலில் இன்று மூன்று இளைஞர்கள் மூழ்கியுள்ளார்கள். இவர்களில் ஒருவர் இறந்த நிலையில் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனாலும் மற்றைய இருவரும் இதுவரை மீட்க்கப்படவில்லை. இருவரும் இறந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

வவுனியாவை சேர்ந்த மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் முல்லைத்தீவு கடற்கற்கரைக்கு சென்றுள்ளனர். இவர்களில் இளைஞர்கள் மூவரும் கடலில் நீராடிய நிலையில் கடலில் மூழ்கியுள்ளனர்.
ஜவாத் புயல் இலங்கையிலிருந்து இந்தியாவை நோக்கி நகர்ந்துள்ள போதும் அதன் தாக்கங்கள் தொடர்கின்றன எனவும், கடல் கொந்தளிப்பு இருக்கின்றது என்ற அறிவிப்பு உள்ள நிலையிலும் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறித்த மூன்று இளைஞர்களும் நண்பர்கள் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் வவுனியா, தோணிக்கல்லை சேர்ந்த 26 வயதான சிவலிங்கம் சகிலன் இறந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளதோடு அவரது உடல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவத்தில் விஜயகுமாரன் தர்சன், மனோகரன் தனுஷன் ஆகியோர் காணாமல் போயுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸார் குறித்த சமப்வம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லை கடலில் மூழ்கிய மூவர்

Social Share

Leave a Reply