விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41,128 ஆக அதிகரித்துள்ளது.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி, மேல் மாகாணத்தில் 17,472 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் 24,25 மற்றும் 26 ஆம் திகதிகளில் மேல், வடமேல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply