புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி சூழலைக் கவனத்தில் கொண்டு மொரகொல்ல நீர் மின்சார கருத்திட்ட நிர்மாண வேலைகளை நிறைவு செய்தல், பிந்திய நிர்மாண செயற்பாடுகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தி குறிக்கோளாகக் கொண்ட இணையான கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்காகச் சிறிய செலவு நிதி வசதிகளின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொது மூலதன வளங்களிலிருந்து (நிலையான) 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேற்குறித்த கடன் தொகையை திறைசேரி பிணைமுறியின் கீழ் 02 தடவைகளில் நேரடியாக இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Social Share

Leave a Reply