சிவில் அமைப்பைச் சந்தித்த சுவிஸ் தூதரகக் குழுவினர்

சிவில் அமைப்பைச் சந்தித்த சுவிஸ் தூதரகக் குழுவினர்

சுவீஸ் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார சமாதான அபிவிருத்திக்கான குழுவினர் கடந்த 22ம் திகதி மெசிடோ சமூக மேம்பாட்டுப் பொருளாதார நிறுவனத்தின் மன்னார் அலுவலகத்திற்கு
விஜயம் செய்திருந்தனர்.

சிவில் அமைப்புகள் மற்றும் மெசிடோ நிறுவன பிரதிநிதிகளுடன் இக்குழுவினர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இக் கலந்துரையாடலில் தற்பொழுதுள்ள அரசியல் நிலைப்பாடு , பொருளாதாரம் , மன்னார் மாவட்டத்தில் மக்கள் எதிர் நோக்கும் சவால்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இங்கு சிவில் மக்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை சுவீஸ் தூதரகக் குழுவினர் கரிசனையாகக் கேட்டறிந்ததாக மெசிடோ நிறுவனத்தின் மன்னார் மாவட்டத் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளார்.

சர்வதேசச் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இந்த அரசு வடக்கு கிழக்குப் பகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு ஐநாவின் தீர்மானங்களை எற்று செயற்பட வேண்டும் என எதிர்பார்த்து நிற்பதாகவும், அத்துடன் பொறுப்பு கூறல் தொடர்பாக முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவற்றை நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தையும் சுட்டிக் காட்டிய சிவில் சமூக உறுப்பினர்கள், பாதிப்படைந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் சுவிஸ் தூதரகக் குழுவினருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply