பாக்கிஸ்தானில் இலங்கையர் பிரியந்த படு கொலை செய்யப்பட்டது சாதாரண விடயம் என்பது போல அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பேர்வைஸ் கட்டாக் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த கருத்து இலங்கையிலும், மேலும் பல இடங்களிலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு அதி உச்ச தண்டனை வழங்கப்படுமென அறிவித்துள்ள நிலையில், அதே அரசின் பாதுகாப்பு அமைச்சர் இந்த விடயம் சிறு பிள்ளை விளையாட்டுக்கு ஒப்பானது என தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள், கல்லூரிகளில் மீது அதீத பற்று கொண்ட பிள்ளைகள் போல சமயம் மீது பற்று கொண்டவர்களின் செயற்பாடு என அவர் இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
