பாக்கிஸ்தானில் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த பிரியந்த குமாரவின் பூதவுடல் இன்று மாலை இலங்கையை வந்தடைந்தது.
பாக்கிஸ்தான் லாகூரில் இருந்து விமானம் மூலமாக இலங்கை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த உடல், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை வேளையில் அன்னாரின் பூதவுடல் குடும்பத்திடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அவரின் உடல் பாக்கிஸ்தானில் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவரது தலைப்பகுதி மிக மோசமாக சிதைவடைந்துள்ளதாகவும், உடலின் அநேகமான பகுதிகள் தீயில் எரிந்துவிட்டதாகவும், கை, கால் பகுதிகள் முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாளை மூடிய பேளையில் பிரியந்த குமாரவின் உடல் குடும்பத்திடம் கையளிக்கப்படுமெனவும், குடும்ப விருப்பத்தின் படி இறுதி கிரியைகள் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் முக்கிய குற்றவாளிகளாக இனம் காணப்பட்டுள்ள அதேவேளை, 15 பேர் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, 15 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.