இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பு சிநேகபூர்வ சந்திப்பு என தெரிவித்துள்ள பிரதமர், “போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் அதிகமான உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறிதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி பாராளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலில் இன்று (06/11) காலை ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
“பல்வேறு காலகட்டங்களில் என்னுடன் இணைந்து அரசியல் போராட்டங்களில் ஈடுபட்ட எம்.பி.க்களுடன் கடந்த காலங்களில் இதே போன்ற போராட்டங்களில் ஈடுபட்டதை நினைவு கூர்ந்த அதேவேளை, குறித்த சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோருடன் சுமுகமாகமான கலந்துரையாடியதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
