50 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று (07/12) முதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மசகு எண்ணெய் பற்றாக்குறையின் காரணமாக கடந்த மாதம் 15ஆம் திகதி வரை குறித்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
அத்துடன் அந்நிய செலாவணி தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கண்டதன் பின்னர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீள திறக்கப்படுமென வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில முன்னராக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 90,000 மெட்ரிக் டொன் அளவிலான மசகு எண்ணெயுடன் கப்பலொன்று நேற்று முன்தினம் (05/12) நாட்டை வந்தடைந்ததாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.