தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தேசியப்பட்டியல் மூலம் பாரளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்கள் தோல்வியடைந்தால் அவர்களுக்கு தேசியப்பட்டியில் மூலம் ஆசனம் வழங்கவேண்டும் என்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் மனோ கணேசன் பாரளுமன்ற உறுப்பினர் பதவியை பெறவுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மனோ கணேசன் சார்பிலோ, ஐக்கிய மக்கள் சக்தி சார்பிலோ உறுதிப்படுத்தப்படவில்லை. வி மீடியாவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.