2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரதமர் வேட்பாளர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளரானார்.
இதனூடாக இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஒரு பாராளுமன்ற வேட்பாளரால் பெறப்பட்ட அதிகூடிய விருப்பு வாக்குகள் என்ற வரலாற்றையும் படைத்துள்ளார்.
முன்னதாக, 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளைப் பெற்று அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளராக இருந்தார்.