2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பதுளை நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் பதுளையில், 10ஆம் இலக்கம் அச்சிடப்பட்ட சட்டைகளை அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஹரின் பெர்னாண்டோவின் ஆதரவாளர்களின் அரசியல் பிரச்சாரத்தை பொலிஸார் நிறுத்த முற்பட்டதையடுத்து, பதுளையில் பதற்றமான சூழல் நிலவியது.
இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஹரின் பெர்னாண்டோ இன்று காலை (20.11) பதுளை பொலிஸ் நிலையத்தின் முன்னிலையாகியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.