சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டது

சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டது

இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு அறிவித்துள்ளது.

அரசுடன் எட்டப்பட்ட உடன்பாடு தொடர்பில் கொழும்பில்
இன்று சனிக்கிழமை நடத்திய ஊடகச் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இந்த இணக்கப்பாட்டு ஒப்பந்தம் நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையும் முகாமைத்துவமும் அங்கீகரித்ததன் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் நான்காம் கட்ட கடன் வழங்கப்படும் என்றும் நான்காம் கட்ட கடனாக இலங்கைக்கு 330 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது.

கொள்கைகளை தொடர்ச்சியாக பராமரிக்க புதிய அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்பு, திட்டத்தின் நோக்கங்களை அடைய முக்கியமானது என்றும் பீட்டர் ப்ரூவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான பிரதிகள் குழு கடந்த 17ஆம் திகதி
இலங்கைக்கு வருகை தந்ததுடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், உயர்மட்ட அரச அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது.

விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்க 2022ஆம் ஆண்டு உடன்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply