
குளியாபிட்டிய – கம்புராபொல பாலத்திற்கு அருகில் புஜ்கமுவ ஓயாவில் ஜீப் ரக வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
குருநாகல் – கொபெய்கனே பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய இருவரே இந்த விபத்தில் உயிரிழந்தனர். இருவரும் சகோதரர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளமை
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர் அவர்கள் மீண்டும் வீடு திரும்பிய போது இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.