2025ஆம் நிதியாண்டின் முதல் 04 மாதங்களுக்கான மீண்டெழும் செலவினங்கள், மூலதனச் செலவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் ஏனைய கடன் சேவைக்கான அனுமதியை பெறும் இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இடைக்கால கணக்கறிக்கை மீது கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றதுடன், இன்ற மாலை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் சபையில் இருந்த போதிலும் வாக்கெடுப்பை எவரும் கோரவில்லை என்பதால் இடைக்கால கணக்கறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
இடைக்கால கணக்கு அறிக்கையை தயாரிப்பது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கடந்த நவம்பர் 25ஆம் திகதி அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டது.
முதல் நான்கு மாதங்களுக்கு அரச செலவினங்களை மேற்கொள்ள இடைக்கால கணக்கறிக்கையின் ஊடாக 2600 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.