கோல் மார்வல்ஸ் அணியின் கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு

கோல் மார்வல்ஸ் அணியின் கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு

கோல் மார்வல்ஸ் அணி கடற்கரை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை அவர்களது சமூக சேவை பணியாக நாளைய தினம் செய்யவுள்ளது. நாளை(08.12) கொழும்பு, கல்கிஸ்ஸை சுகர் கடற்கரை பகுதியில் இந்த வேலை திட்டத்தை செய்யவுள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கையில் ஸ்ரீலங்கா T10 லீக் நடைபெறவுள்ள நிலையில், கோல் மார்வல்ஸ் அணியினர் ஒன்றிணைந்துள்ளார்கள். அவர்களினால் இந்த திட்டம் நடாத்தப்ப்படவுள்ளத்து.

நாளை நடைபெறும் இந்த நிகழ்வில் அணியின் உப பயிற்றுவிப்பாளர் சாமர கப்புகெதர, வீரர்களான பானுக ராஜபக்ஷ, பினுற பெர்னாண்டோ, கேஷ்ரிக் வில்லியம்ஸ், அன்றே பிளட்சர், சமிந்து விக்ரமசிங்க, ஆகியோர் கலந்து கொள்ளவுளள்னர்.

இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு, ஆதரவு வழங்குமாறு கோல் மார்வல்ஸ் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

கோல் மார்வல்ஸ் அணியின் கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு

Social Share

Leave a Reply