பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைச் சபை, நேற்று (07/12) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், பாராளுமன்றக் கட்டடத் தொகுதியின் முதலாம் இலக்க அறையில் கூடியது.
குறித்த சந்திப்பின் போது, நாட்டின் தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, தற்போதைய பாதுகாப்புப் பிரிவினரின் அவதானத்துக்கு இலக்காகியுள்ள விடயங்கள் தொடர்பில், அமைச்சர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பிரச்சினைகள் மற்றும் யோசனைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்களின் அதிகாரிகள், இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.