இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உலகளவில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டிருத்தப்பட்டிருந்தன.
அதன்படி இலங்கை மற்றும் போலந்துக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று (08/12) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் லொட் பொலிஷ் எயார்லைன்ஸ் இந்த விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் இலங்கைக்கான போலந்து தூதுவர் பேராசிரியர் அடம் பரகோவ்ஸ்கிக்கும் இடையில் நேற்று (07/12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
