நெருங்கும் பண்டிகை காலங்களில் சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க பிராந்திய பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார விதிமுறைகளை மீறி பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மற்றும் அதிக எண்ணிக்கையில் கூடும் நுகர்வோர் மீது அவர்கள் கடுமையாக நடந்துகொள்வார்கள் என்றும் உபுல் ரோஹண எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “கொவிட் நெறிமுறைகளை மீறி வியாபாரங்களில் ஈடுபடும் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஒமிக்ரொன் உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தாலும், இலங்கையில் உள்ள மக்கள் தத்தமது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கிட்டத்தட்ட மறந்துவிட்டார்கள் போல் தெரிகிறது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
