பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து இணையவழி நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி
அவசர தயார்நிலைக் குழு எச்சரித்துள்ளது.
பரிசுகளை வென்றதாகக் கூறி அழைப்புகளைப் பெறுவதன் மூலம் பொதுமக்கள் நிதி ரீதியாக ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள்
கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர தயார்நிலைக் குழு முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி, நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில முறைகேடுகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்
அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் இவ்வாறான இணையவழி நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.