ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று தேசிய பாதுகாப்பு தினம்
அனுஷ்டிக்கப்படுகிறது

ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடுமுழுவதும் இன்று காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வலியுறுத்தியிருந்தது.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
உயிரிழந்ததுடன், ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமற் போயிருந்தனர்.

இலங்கை எதிர்கொண்ட பாரிய இயற்கை அனர்த்தமாக இது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

Social Share

Leave a Reply