வவுனியா கனகராயன்குளத்தில் விபத்து – ஒருவர் பலி

வவுனியா கனகராயன்குளத்தில் இடம்பெற்ற வாகன விகத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலைஇந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்துகனகராயன்குளத்தினூடாக பயணித்த கப் ரக வாகனமும், வவுனியாநோக்கி பயணித்த டிப்பரும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில்உயிரிழந்துள்ள அதேவேளை, உயிரோடு இருந்த கப் ஓட்டுநரை, வாகனத்தை உடைந்து மக்கள் வெளியே எடுத்துள்ளனர்

கொரோனா காரணமாக பல உயிர்கள் காவு கொள்ளப்படும் நிலையில், ஊரடங்கு அமுலில் உள்ள வேளையிலும் இது போன்ற உயிரிழப்புகள் அநாவசியமானவை. வீதி விதிகளை மதித்து ஓட்டுனர்கள் முறையாக வாகனங்களை செலுத்தினால் விபத்துகளை தவிர்கலாம்.

விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது பொலிஸ் நிலையத்துக்கு இதுவரை தகவல்கள் வந்து சேரவில்லையெனவும், சம்பவ இடத்திலேயே பொலிஸார் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் காயங்களுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுளளதாக உறுதி செய்தனர். வைத்தியசாலை தரப்பினர்

Social Share

Leave a Reply