வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமிடங்கள் – இன்றைய (08.09) & நாளைய (09.09) விபரம்

இன்றைய தினம் பண்டாரிகுளம் கிராமசேவகர் பிரிவிலுள்ள மக்களுக்கு விபுலானந்தா கல்லூரியில் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.  நெளுக்குளம் கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன. இன்றைய தினம் தடுப்பூசிகள் ஏற்றப்படும் பகுதிகளும், நாளைய தினம் தடுப்பூசிகள் ஏற்றப்படும் பகுதிகளது முழுமை விபரம் கீழுள்ள அட்டவணையில் உள்ளது.

வவுனியாவில் நேற்று  முதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஆரம்பித்திருகின்றன.வவுனியாவின் 24 நிலையங்களில் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நடைபெற்றுள்ளன. முதலாவது ஊசிகளை பெறாதவர்கள் பெற்றுக்கொண்ட அதேவேளை இரண்டாவது ஊசிகளை அதிகமானவர்கள் இன்றைய தினம் பெற்றுக்கொண்டனர்.   இரண்டாவது நாளான இன்று  கிராமசேவகரிடமிருந்து விண்ணப்பபடிவத்தையும் வரிசை இலக்கத்தையும்(டோக்கன்)  பெற்றுக் கொண்டு அந்தந்த கிராம சேவகர் பிரிவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. முதலாவது, இரண்டாவது ஊசிகளை பெற்றுக்கொள்ளும் அனைவரும் கிராமசேவையாளரிடம் விண்ணப்பபடிவம் மற்றும் டோக்கன் பெறப்பட வேண்டும்.

வவுனியா நகரம், வவுனியா நகரம் வடக்கு, இறம்பைக்குளம், வைரவர்புளியங்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் 09 ஆம் திகதி வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. முதலாவது இரண்டாவது ஊசிகளை பெறவுள்ளவர்கள் தங்களுக்கான கிராமசேவையாளரிடம் விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து, வரிசை இலக்கத்தையும்(டோக்கன்) பெற்று காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிக்குள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமென வவுனியா மாவட்ட தொற்றுயியலாளர் வைத்திய கலாநிதி செ.லவன் வி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.

அரச திணைக்களங்களை சேர்ந்தவர்கள் 10 ஆம் திகதி முதல் வுனியா காமினி மகா வித்தியாலயத்தில் தடுபூசிகளை பெற்றுக்கொள்ள முடியும். வவுனியா பிராந்திய சுகாதர திணைக்களத்தின் தொற்றுயில் பிரிவில் விண்ணப்பபடிவங்களை பெற்று கிராமசேவையாளரிடம் பூர்த்தி செய்து தங்களுக்கான தடுப்பூசிகளை வுனியா காமினி மகா வித்தியாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம். பிறமாவட்டங்களை சேர்ந்தவர்கள் திணைக்கள தலைவரின் கையொப்பத்தோடு ஊசிகளை பெற்றுகொள்ள முடியும். கிராமசேவகர் பிரிவுக்கான நிலையங்களிலும் ஊசிகளை பெற்றுகொள்ள முடியும்.

நீண்ட நாள் நோயுடையவர்களும், தொற்றா நோயுடையவர்களும் அவர்களுக்கான விசேட வைத்திய நிபுணரின் ஆலோசனையோடு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும். அவர்களுக்கான விண்ணப்ப படிவங்களை வைத்தியசாலையிலேயே பெற்று பூர்த்தி செய்து ஊசிகளை போட்டுக்கொள்ள முடியும்.

ஆசிரியர்கள் தங்களுக்கான விண்ணப்ப படிவங்களை  பூர்த்தி செய்து கிராம சேவையாளரிடம் உறுதி செய்தி வரிசை இலக்கத்தையும்(டோக்கன்)  பெற்றுக் கொண்டு  தங்கள் கிராமசேவையாளர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும். கட்டாயம் பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலையத்தில்தான் ஊசிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றில்லை எனவும் சுகாதர தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஊசிபோடுதல் தொடர்பில் அறிவித்தல்கள் தொடர்ச்சியாக கிராம சேவையாளரூடாக வழங்கப்படுமெனவும், அறிவிக்கப்படாத பகுதிகள் மற்றும் வயது பிரிவுகள் தொடர்பிலும் கிராமசேவையாளர்கள் ஊடக அறிவித்தல்கள் வழங்கப்பபடுமெனவும் அவற்றினடிப்படையில் செயற்படுமாறும் வவுனியா மாவட்ட தொற்றியலாளர் வைத்தியகலாநிதி செ.லவன் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

எமது வி தமிழ் இணையத்தின் ஊடாகவும் தடுப்பூசிகள் வழங்குதல் தொடர்பில் எமக்கு கிடைக்கும் விபரங்களை முழுமையாக தொடர்ச்சியாக வழங்கவுள்ளோம்.

இன்று (08.09.2021)  தடுப்பூசி வழங்கும் நிலையங்கள்

தடுப்பூசி வழங்கும் நிலையம்கிராம சேவகர் பிரிவு
முஸ்லிம் மகா வித்தியாலயம் பட்டாணிச்சிபுளியங்குளம்
கூமாங்குளம் சித்தி விநாயகர்  மகா வித்தியாலயம்    கூமாங்குளம்  
தமிழ் மத்திய மகா வித்திரியாலயம்                                           தோணிக்கல்  
விபுலானந்தா மகாவித்தியாலயம்பண்டாரிகுளம்
பூவரசங்குளம் வைத்திய சாலைபூவரசங்குளம், பம்பைமடு, செக்கடிப்பிலவு, வேலங்குளம், சாலம்பைக்குளம், பாவற்குளம் படிவம் 04, பாவற்குளம் படிவம் 05 & 06 குருக்கள் புதுக்குளம்
பாவற்குளம் வைத்தியசாலை ராசேந்திரங்குளம், சூடுவெந்தபிலவு, பாவற்குளம் படிவம் 02
சிதம்பரபுரம் வைத்தியசாலைஆசிகுளம், சமலங்குளம், வன்னிக்கோட்டம், சிதம்பரபுரம், சிதம்பரநகர்,கோமரசன்குளம், கல்நாட்டினகுளம், கல்வீரன்குளம், தரணிக்குளம், மதுராநகர்
ஓமந்தை வைத்தியசாலைநொச்சிகுளம், கள்ளிகுளம், சேமமடு பன்றிகெய்தகுளம், ஆறுமுகத்தான்புதுக்குளம், ஓமந்தை, மகிழங்குளம், இளமருதங்குளம் 
நவ்வி வைத்தியசாலைமருதமடு, புல்மோட்டை
செட்டிகுளம் வைத்தியசாலை செட்டிகுளம், முகத்தான்குளம், கிறிஸ்தவகுளம், கன்கன்குளம், பாவற்குளம் படிவம் 09, முதலியார் குளம், ஆண்டியா புளியங்குளம், கந்தசாமிநகர் 
கணேசபுரம் வைத்தியசாலைபெரியதம்பனை, பெரியகட்டு, கன்னட்டி, பிரமநாலன்குளம்
நேரியகுளம் வைத்தியசாலை  நேரியகுளம், சின்னசிப்பிக்குளம், மரதமடுவ,  பெரியபுளியங்குளம்
மாமடு வைத்தியசாலை  மாமடு, அக்போபுர, மஹாகச்சகொடிய, புதுபுளங்குலமா
புளியங்குளம் வைத்தியசாலை  புளியங்குளம் வடக்கு, புளியங்குளம் தெற்கு
நெடுங்கேணி வைத்தியசாலை  நெடுங்கேணி வடக்கு, நெடுங்கேணி தெற்கு
கனகராயன்குளம் வைத்தியசாலை  கனகராயன்குளம் வடக்கு, கனகராயன்குளம் தெற்கு, மாங்குளம், சின்னடமபன் 
நைனாமடு வைத்தியசாலை  நைனாமடு, அனந்தர்புளியங்குளம், பரந்தன்
குழவிசுட்டான் நிலையம்   குழவிசுட்டான், மரையிலுப்பை
ஒலுமடு அ.த.க பாடசாலை  ஒலுமடு, மாமடு
கற்குளம் நிலையம்  கற்குளம், மருதோடை, பட்டிக்குடியிருப்பு, ஊஞ்சல்கட்டி, வெடிவைத்தகல்லு 
போகஸ்வெவ வைத்தியசாலைபிரப்பன்மடுவ
பரக்கும் மஹா வித்தியாலயம்  இரட்டைபெரியகுளம், அவுஷதப்பிட்டிய, அலகல்ல, கல்குடாமடு
உலுக்குளம் வைத்தியசாலை  உலுக்குளம், ஏக்கர் 20,40,60 ஏக்கர் 400
மடுக்கந்த விகாரை  மடுக்கந்த, மஹாமகிழங்குலம நெடுங்குளம
நடமாடும் சேவை  அவரத்துலவா ரெங்கெத்கெம பூமடுவ ரக் 07 மரதன்மடுவ

நாளை (09.09.2021) தடுப்பூசி வழங்கும் நிலையங்கள்

மூன்றாம் நாள் – 09.09.2021

தடுப்பூசி வழங்கும் நிலையம்கிராம சேவகர் பிரிவு
வவுனியா காமினி மகா வித்தியாலயம்வவுனியா நகரம், வவுனியா நகரம் வடக்கு, வைரவர் புளியங்குளம், இறம்பைக்குளம்
வவுனியா மாவட்ட வைத்தியசாலைநீண்டநாள் நோயுடையவர்கள்
தாண்டிக்குளம் பிரமண்டு மகா வித்தியாலயம்தாண்டிக்குளம்
கந்தபுரம் வாணி வித்தியாலயம்கந்தபுரம்
தமிழ் மத்திய மகா வித்திரியாலயம்                                           மூன்றுமுறிப்பு  
விபுலானந்தா மகாவித்தியாலயம்பண்டாரிகுளம்
பூவரசங்குளம் வைத்திய சாலைபூவரசங்குளம் பம்பைமடு செக்கடிப்பிலவு வேலங்குளம் சாலம்பைக்குளம் பாவற்குளம் படிவம் 04 பாவற்குளம் படிவம் 05 & 06 குருக்கள் புதுக்குளம்
பாவற்குளம் வைத்தியசாலை ராசேந்திரங்குளம் சூடுவெந்தபிலவு பாவற்குளம் படிவம் 02
சிதம்பரபுரம் வைத்தியசாலைஆசிகுளம் சமலங்குளம்
ஓமந்தை வைத்தியசாலைநொச்சிகுளம் கள்ளிகுளம் சேமமடு பன்றிகெய்தகுளம் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஓமந்தை மகிழங்குளம் இளமருதங்குளம் 
நவ்வி வைத்தியசாலைமருதமடு புல்மோட்டை
செட்டிகுளம் வைத்தியசாலை செட்டிகுளம் முகத்தான் குளம் கிறிஸ்தவகுளம் கன்கன்குளம் பாவற்குளம் படிவம் 09 முதலியார் குளம் ஆண்டியா புளியங்குளம் கந்தசாமிநகர் 
கணேசபுரம் வைத்தியசாலைபெரியதம்பனை பெரியகட்டு கன்னட்டி பிரமநாலன்குளம்
நேரியகுளம் வைத்தியசாலை  நேரியகுளம் சின்னசிப்பிக்குளம் மரதமடுவ  பெரியபுளியங்குளம்
மாமடு வைத்தியசாலை  மாமடு அக்போபுர மஹாகச்சகொடிய புதுபுளங்குலமா
புளியங்குளம் வைத்தியசாலை  புளியங்குளம் வடக்கு புளியங்குளம் தெற்கு
நெடுங்கேணி வைத்தியசாலை  நெடுங்கேணி வடக்கு நெடுங்கேணி தெற்கு
கனகராயன்குளம் வைத்தியசாலை  கனகராயன்குளம் வடக்கு கனகராயன்குளம் தெற்கு மாங்குளம் சின்னடமபன் 
நைனாமடு வைத்தியசாலை  நைனாமடு அனந்தர்புளியங்குளம் பரந்தன்
குழவிசுட்டான் நிலையம்   குழவிசுட்டான் மரையிலுப்பை
ஒலுமடு அ.த.க பாடசாலை  ஒலுமடு மாமடு
கற்குளம் நிலையம்  கற்குளம் மருதோடை பட்டிக்குடியிருப்பு ஊஞ்சல்கட்டி வெடிவைத்தகல்லு 
போகஸ்வெவ வைத்தியசாலைபிரப்பன்மடுவ
பரக்கும் மஹா வித்தியாலயம்  இரட்டைபெரியகுளம் அவுஷதப்பிட்டிய அலகல்ல கல்குடாமடு
உலுக்குளம் வைத்தியசாலை  உலுக்குளம் ஏக்கர் 20,40,60 ஏக்கர் 400
மடுக்கந்த விகாரை  மடுக்கந்த மஹாமகிழங்குலம நெடுங்குளம
நடமாடும் சேவை  அவரத்துலவா ரெங்கெத்கெம பூமடுவ ரக் 07 மரதன்மடுவ
வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமிடங்கள்  - இன்றைய (08.09) & நாளைய (09.09) விபரம்

Social Share

Leave a Reply