இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நியூசிலாந்து வெலிங்டனில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில், நியூலந்து அணி இலகுவாக 9 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இலங்கை அணி 43.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களை பெற்றது. இதில் அவிஷ்க பெர்னாண்டோ 56 ஓட்டங்களையும், ஜனித் லியனகே 36 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 35 ஓட்டங்களையும், சமிந்து விக்ரமசிங்க 22 ஓட்டங்களையும் பெற்றனர். ஜனித் லியனகே, அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் 87 ஓட்டங்களை ஐந்தாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றனர். இலங்கை அணியின் முன் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவறியமை இலங்கை அணி ஓட்டங்களை அதிகமாக பெற முடியாமல் போனது. இதன் காரணமாக நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில் மட் ஹென்றி 4 விக்கெட்களையும், ஜேக்கப் டபி, நேதன் ஸ்மித் ஆகியோர் தலா 2 விக்கெட்ளை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 26.2 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 180 ஓட்டங்களை பெற்றது. இதில் வில் ஜங் ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ரச்சின் ரவீந்திரா 45 ஓட்டங்களையும், மார்க் சப்மன் 29 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.