அவுஸ்திரேலியா-இந்தியா டெஸ்ட் தொடர் நிறைவு

அவுஸ்திரேலியா-இந்தியா டெஸ்ட் தொடர் நிறைவு

இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஐந்து போட்டிகளடங்கிய டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா அணி 3-1 என கைப்பற்றியுள்ளது. இந்தியா அணி முதற் போட்டியை வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியை அவுஸ்திரேலியா வென்றது. மூன்றாவது போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. ஏனைய இரண்டு போட்டிகளையும் அவுஸ்திரேலிய வென்றது. இந்த தொடர் வெற்றி காரணமாக அவுஸ்திரேலியா அணி இரண்டாவது தடவையாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலியா, சிட்னியில் மூன்றாம் திகதி ஆரம்பித்தது. மூன்றாம் நாளான இன்று 06 விக்கெட்களினால் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

இந்தியா அணி இரண்டாம் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது. ரிஷாப் பான்ட் 33 பந்துகளில் 66 ஓட்டங்களை பெற்றார். யஷாஸ்வி ஜய்ஷ்வால் 22 ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல், சுப்மன் கில் ஆகியோர் தலா 13 ஓட்டங்களை பெற்றனர். அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஸ்கொட் போலன்ட் 6 விக்கெட்களையும், பட்கம்மின்ஸ் 3 விக்கெட்களையும், பியூ வெப்ஸ்டர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். அவுஸ்திரேலியா அணிக்கு 162 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட்களை இழந்து வெற்றியைப் பெற்றது. உஷ்மான் காவஜா 41 ஓட்டங்களையுயும், பியூ வெப்ஸ்டர் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும், டிரவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியா அணியின் பந்துவீசில் பிரசித் க்ரிஷ்னா 3 விக்கெட்களையும், மொஹமட் சிராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 72.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 185 ஓட்டங்களை பெற்றது. ரிஷாப் பான்ட் 40 ஓட்டங்களையும், ரவீந்தர் ஜடேஜா 26 ஓட்டங்களையும், ஜஸ்பிரிட் பும்ரா 22 ஓட்டங்களையும் பெற்றனர். ரோஹித் ஷர்மா இந்தப் போட்டியில் விளையாடவில்லை. பும்ரா தலைமை தாங்குகிறார். அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஸ்கொட் போலன்ட் 4 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களையும், பட் கம்மின்ஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி உஸ்மன் காவஜாவின் விக்கெட்டை இழந்து .3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 9 ஓட்டங்களை பெற்ற நிலையில் இன்று துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் பியூ வெப்ஸ்டர் 57 ஓட்டங்களையும், ஸ்டீபன் ஸ்மித் 33 ஓட்டங்களையும், சாம் கொண்டாஸ் 23 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியா அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஜ், பிரசித் க்ரிஷ்னா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஜஸ்பிரிட் பும்ரா, நித்திஷ்குமார் ரெட்டி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள். பும்ரா உபாதை காரணமாக முழுமையாக பந்துவீச முடியாமல் போனது இந்தியாவுக்கு பின்னடைவை ஏறபடுத்தியது. இருப்பினும் ஏனைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி அவுஸ்திரேலியா அணியை கட்டுப்படுத்தினர்

Social Share

Leave a Reply