இஸ்லாம் மதத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானதேரருக்கு 09 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (09.01) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து குறித்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி கிருலப்பனை பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இஸ்லாம் மதத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானதேரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.