நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்யாது என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்
நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இன்று புதன்கிழமை இதனை அறிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கத்தின் கொள்கையின்படி, எம்.பி.க்களுக்கு வாகன வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதில்லை ,
அந்தக் கொள்கையின்படி, ஒரு எம்.பி.க்கு தனது பணியை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு வாகனம் மாத்திரம் வழங்கப்பட வேண்டும்
பதவிக்காலம் முடிவடைந்ததன் பின்னர் மீள கையளிக்க வேண்டும். 05 ஆண்டுகளாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாமல் உள்ளதால்
வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையுள்ளது.
ஆனால் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு,எம்.பி.க்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்போவதில்லை” என்றார்.