பாடசாலைகளுக்கிடையிலான மூன்றாம் பிரிவு கிரிக்கெட் போட்டிகளில் 11 வயதான ரிஷியுதன், 13 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் 9 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இவர் இந்த வருட தொடரில் ஏற்கனவே 8 விக்கெட்களை ஒரு தடவை கைப்பற்றியுள்ளார். கடந்த வருடம் இவர் ஓட்டங்களை வழங்காது 8 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்தவர்.
இந்த வருட தொடரில் சென்ட். ஜோசப் கல்லூரி அணிக்காக ரிஷியுதன் விளையாடி வருகிறார். அவரது பாடசலை தற்சமயம் மூன்றாம் சுற்றில் விளையாடி வருகிறது.
இன்று(06.02) சென்ட். ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிடய சென்ட். ஜோசப் கல்லூரி அணி 9 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றது. மாம்பே தர்மராஜா கல்லூரி அணி சகல விக்கெட்களையும் இழந்து 73 ஓட்டங்களை பெற்றது. இதில் 9 விக்கெட்களை ரிஷியுதன் கைப்பற்றினார். இரண்டாம் இன்னிங்சில் சென்ட். ஜோசப் கல்லூரி அணி 3 விக்கெட்ளை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.