பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மற்றும் யாழ் இந்து கல்லூரி அணிகளுக்கிடையிலான 14 ஆவது இந்துக்களின் சமர் இன்று(07.02) ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இந்த சமரானது 2 நாள் போட்டியாகும்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய யாழ் இந்து கல்லூரி அணி 43.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களை பெற்றது. இதில் A.விதுஷன் 49(75) ஓட்டங்களையும், K. பரசித் 20(27) ஓட்டங்களையும் பெற்றனர்.
பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் பந்துவீச்சில் V. யுவராஜ் 4 விக்கெட்களையும், தேஸ்கர், ஸ்ரீ நிதுசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணி 32.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதில் T. சந்தோஷ் 42 ஓட்டங்களை பெற்றார்.
யாழ் இந்து கல்லூரி பந்துவீச்சில் நிதீஷ் 4 விக்கெட்களையும், சுதர்ஷன் சுபர்ணன், விதுஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடி வரும் யாழ் இந்து கல்லூரி அணி முதலாம் நாள் முடிவில் 16 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 71 ஓட்டங்களை பெற்று 152 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது சுதர்ஷன் சுபர்ணன் 11 ஓட்டங்களுடனும், விதுஷன் 20 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர்.
பரஷித் 39 ஓட்டங்களையும், பகவனன் ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தனர்.