இன்று (10/12) சர்வதேச மனித உரிமைகள் தினமாகும்.
1948ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கமைய 1955ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பிரகடனத்தை இலங்கை ஏற்றுக்கொண்டது.
அனைத்து பிரஜைகளுக்கும் பிறப்பு முதல் உள்ள உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. தனி மனிதர்கள் அனைவரும் சுதந்திரமானவர்களாகவும் உரிமையிலும் கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை இப்பிரகடனம் வலியுறுத்துகின்றது.
எமது நாட்டின் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் அடிப்படை உரிமைகள் சில ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆரசியலமைப்பின் மூன்றாம் அத்தியாயத்தில் இலங்கையின் அடிப்படை உரிமைகள் எவை என்பது பற்றி விளக்கமளிக்கப்பட்டுள்ளன.
எனினும் உயிர் வாழுவதற்கான உரிமை பற்றி எந்தவொரு இடத்திலும் தெளிவாக சுட்டிக்காட்டவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். காலப்போக்கில் உயிர் வாழுவதற்கான உரிமையும் அடிப்படை உரிமையான உள்வாங்கப்பட வேண்டும் என்பது பல சட்ட நிபுணர்கள் மற்றும் இலங்கைவாழ் பிரஜைகளின் ஒருமித்த கருத்தாகும்.