தேசபந்துவின் வீட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான போத்தல்கள் கண்டெடுப்பு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டில் சுமார் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும்
214 மது போத்தல்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சோதனை நடவடிக்கையின் போது இரண்டு தொலைபேசிகளும் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த தொலைபேசிகளிலிருந்து முக்கியமான தகவல்களைக் கண்டறிய முடியும்” என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால
மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply