காலி,நெலுவ – பெலவத்தை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நெலுவையில் இருந்து பெலவத்தை நோக்கி சென்ற லொறியும், பெலவத்தையிலிருந்து நெலுவ நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும்
ஹத்தே கணுவ பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெலுவ களுபோவிட்டியாவ பகுதியில் வசிக்கும் 55 மற்றும் 27 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.