அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதி சொகுசு பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை (SLTB) கொண்டுள்ள பேருந்துகள் தற்போது அதன் அதிக பயன்பாட்டு காலத்தை கடந்துள்ளதால், மிக விரைவாக பேருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய போதுமான பேருந்துகள் இல்லாததைக் கருத்தில் கொண்டு, இலங்கை போக்குவரத்து சபை தற்போது தனியார் துறைக்கு சொந்தமான 61 சொகுசு பேருந்துகளை இலாபப் பகிர்வு அடிப்படையில் இயக்கி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.