செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி பாரிய போராட்டம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கான நீதிவேண்டிய அணையா விளக்கு போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் ஒன்றிணைந்து அமைதியான போராட்டத்தை கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். இன்று யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதிகளில் தீபம் ஏற்றி இந்த போராட்டத்தை அமைதியான வழியில் செய்து வருகின்றனர்.

மக்கள் நடவடிக்கை இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டம், வழக்கறிஞர் வைஷ்ணவி சண்முகநாதன் தலைமையில், 1996 இல் கொல்லப்பட்ட கிருஷாந்தியின் உறவினரால் அடையாளச் சுடர் ஏற்றப்பட்டு இன்று காலை தொடங்கியது.

இந்தப் போராட்டத்தில் மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர், அவர்கள் அனைவரும் நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

செம்மணி தொடர்பான கதை சொல்லும் நிகழ்வு இன்று மாலை நடைபெறும் என்றும், அதைத் தொடர்ந்து இரவு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆவணப்படத் திரையிடல் நடைபெறும் என்றும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கை வருகை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணியாளரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை மனித உரிமைகள் ஆணைக்குழு வரை அமைதியான சங்கிலி தொடராக சென்று மகஜர் கையளிக்கப்படுமெனவும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

Social Share

Leave a Reply