சூரியகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிங்கராஜ வனத்தின் அளுத் இல்லும பகுதியில் ஏலக்காய் பறிக்கச்சென்ற இரண்டு பெண்கள் இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
39 மற்றும் 40 வயதுடைய தெபரன் சைட் இத்தகந்த பிரதேசத்தில் வசிக்கும் இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
நேற்று முன்தினம் (12/12) குறித்த பெண்கள் இருவரும் காலையில் ஏலக்காய் பறிப்பதற்காக சென்றிருந்த நிலையில் இருவரும் மீளக் திரும்பாத காரணத்தால் நேற்று (13/12) பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தேடுதல் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.