தமிழரசுக் கட்சியின் மண்முனை பற்று தலைவரும் தவிசாளருமகிய மாணிக்கராசா இறந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பதவியேற்ற நிலையில் அவரின் இழப்பு வேதனையளிப்ப்பதாக சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.
“2018 ஆண்டே தவிசாளராக வேண்டியவர், சில பல சூழ்சிகளினால் முடியாமல் போனது. ஆனால் இம்முறை தமிழரசுக் கட்சியின் முழு முயற்சியின் அடிப்படையில் ஆசனத்தை கைப்பற்றி மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திககொண்டார். தனது நோய் நொடிகளுக்கு அப்பால் அவரின் மக்கள் சேவைகள் என்றும் நீங்கா இடம்பிடித்து இருந்தது. அன்னாரின் இழப்பு குடும்பத்துக்கும் கட்சிக்கும் மக்களுக்கும் பாரிய இழப்பாகும்” என சாணக்கியன் மேலும் கூறியுளளார்.