இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
கண்டியில் நடைபெற்ற போட்டியில் இலகுவான வெற்றியை இலங்கை அணி பெற்றுள்ள நிலையில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இன்று வெற்றி பெற்றால் இலங்கை தொடரை கைப்பற்றும்.
அணி விபரம்
இலங்கை அணி மாற்றங்களின்றி விளையாடுகிறது. பங்களாதேஷ் அணியில் , மொஹமட் நைம் டஸ்கின் அஹமட், டன்ஷிம் ஹசன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு, ஜேக்கர் அலி, முஸ்டபைசூர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம், ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷ்
ரன்ஷிட் ஹசன், பர்வீஸ் ஹொசைன் எமோன், லிட்டோன் டாஸ், ஜேக்கர் அலி, தௌஹித் ரிதோய், மெஹதி ஹசன் மிராஸ், ஷமீம் ஹொசைன, மொஹமட் சைபுடின், ரிஷாட் ஹொசைன், முஸ்டபைசூர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம்
இலங்கை
பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், குஷல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, தஸூன் சாணக்க, சாமிக்க கருணாரட்ன, மஹீஸ் தீக்ஷண, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார