இலங்கை கிரிக்கெட் தொடர்பாக வெளிப்படும் தொடர்ச்சியான எதிர்மறை விமர்சனங்கள், வீரர்களின் மனநிலையை கடுமையாக பாதிப்பதாக அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.
இருபதுக்கு–20 உலகக் கிண்ணத் தொடர் சுப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து அணியுடனான போட்டிக்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். வெளியில் உருவாக்கப்படும் எதிர்மறை சூழல் இலங்கை கிரிக்கெட்டுக்கு பெரும் சேதம் விளைவிப்பதாகவும், இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் தசுன் ஷானக வலியுறுத்தினார்.