முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கைப்பேசியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் கைப்பேசியை எதிர்வரும் ஏப்ரல் 29ம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாட்சியாளர் அச்சுறுத்தல் தொடர்பான உயர்நீதிமன்ற வழக்கில் ஆதாரமாக அந்த கையடக்க தொலைபேசி தேவைப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

WhatsApp மூலம் பரிமாறப்பட்ட சில தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதற்கான கண்டுபிடிப்புகளின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல் அதிகாரி எஸ்.எஸ்.பி லலித் ரோஹண கமகே தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply