பெற்றோல் வாகனங்களுக்கான QR குறியீடு எரிபொருள் ஒதுக்கீட்டு முறை, தற்காலிக இடைநிறுத்தத்திற்குப் பிறகு, இன்று (18.04) நள்ளிரவு முதல் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பெற்றோல் வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடுகளில் எந்த மாற்றமும் இருக்காது என CPC தலைவர் டி. ஜெ. ராஜகருண தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலம் காரணமாக, ஏப்ரல் 11 நள்ளிரவு முதல் இந்த முறை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதன் அடிப்படியில் இன்று (18.04) நள்ளிரவு முதல், ஒற்றை-இரட்டை வாகனப் பதிவு எண் முறையின்படி, அனைத்து வாகனங்களுக்கும் மீண்டும் QR குறியீடு ஒதுக்கீட்டு முறையின் கீழ் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்.