இன்றும் பல இடங்களில் மழை!

மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் பலத்த மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடி மின்னல் ஏற்படும்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்.

*திறந்தவெளியிலோ அல்லது மரங்களின் கீழோ தங்க வேண்டாம்; பாதுகாப்பான கட்டிடத்திலோ அல்லது மூடப்பட்ட வாகனத்திலோ தங்குங்கள்.

*நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் தங்குவதைத் தவிர்க்கவும்.

*கம்பிவழித் தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

*மிதிவண்டிகள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

*பலத்த காற்றின் காரணமாக மரங்களும் மின் கம்பிகளும் தரையில் விழக்கூடும். எனவே பாதுக்காப்பாக செயற்படவும்.

அவசரகாலத்தில், பிராந்தியப் இடர் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் இலங்கை காவல்துறையினரின் உதவியை நாடவும்.
மேலதிக விவரங்களை 1717 என்ற எண்ணில் வானிலை ஆய்வுத் திணைக்களத்தைத் தொடர்புகொள்வதன் மூலம் பெறலாம்.

Social Share

Leave a Reply