ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கடிதங்களை கையளித்தார் புதிய வத்திக்கான் தூதுவர்!

இலங்கைக்கான வத்திக்கானின் புதிய தூதுவராக (Apostolic Nuncio) நியமிக்கப்பட்டுள்ள பேராயர் அதிமேதகு ஆண்ட்ரே ஜோஸ்வோவிச் (Andrzej Józwowicz), நேற்று (20.04) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தனது நற்சான்றிதழ் கடிதங்களை முறைப்படி கையளித்தார்.

புனித பாப்பரசரினால் இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராயர் ஜோஸ்வோவிச், இதற்கு முன்னர் ஈரானுக்கான வத்திக்கான் தூதுவராக பணியாற்றியவர் ஆவார்.

இந்த நற்சான்றிதழ் கையளிப்பு நிகழ்வைத் தொடர்ந்து, ஜனாதிபதிக்கும் புதிய தூதுவருக்கும் இடையில் சுமூகமான மற்றும் சிநேகபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டதுடன்
இந்நிகழ்வில் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply