ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன இன்று (08.05) கொழும்பு
கொள்ளுபிட்டிய பகுதியில் ஒரு இல்லத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
கபில சந்திரசேன தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கபில சந்திரசேன அண்மையில் Airbus ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து, பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
எனினும், அவரது பிணையை ரத்து செய்யுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அவரை கைது செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.